உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி

கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் வாரச்சந்தையில் கழிப்பிட வசதி இல்லாததால் வியாபாரிகளும் பெண்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துஉள்ளது. இங்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. 400-க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடை, மீன்கடை வியாபாரிகள் உள்ள நிலையில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவதில் சிக்கல் நிலவியது. இதனால், தற்போது வரை புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்துவதற்கு சந்தையில் கழிப்பிடம் இல்லை. பழைய கழிப்பிட கட்டடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சந்தை புதிய கட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை