மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை அருகே டி.புதுாரில் 30 ஆண்டுகளாக ரோடு வசதி இல்லாமல் தவிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை அருகே உள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி டி.புதுார் கிராமம்.இந்த ஊராட்சியில் தான் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 8வது வடக்கு தெருவில்30 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு வசதி இல்லை. இந்த தெருவிற்கு செல்லக்கூடிய ரோடானது மண் ரோடாக உள்ளது. மழை பெய்தால் இந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.வார்டு உறுப்பினர் ராஜா கூறுகையில், புதுார் 8வது வடக்கு தெருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு வசதி இல்லை. இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.சிவகங்கை கலெக்டர்அலுவலகம் அருகில் உள்ளது இந்த பகுதி. மழை பெய்தால் டூவீலரில் கூட செல்ல முடியாது. முதியவர்கள்பெண்கள் டூவீலரில் செல்லும் போது சகதியில் சிக்கி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கிராம மக்கள் சார்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த பகுதிக்கு சிமென்ட் ரோடு அல்லது பேவர் பிளாக் ரோடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago