உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

புதுவயல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

காரைக்குடி: புதுவயல் வாரச்சந்தையில் கடைகள் வழங்குவதில்முறைகேடு நடப்பதாக கூறி, சி.பி.ஐ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுவயல் பேரூராட்சியில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச் சந்தை கட்டடம் கட்டப்பட்டது. 126 கடைகளுடன்கூடிய புதிய சந்தை கட்டடம் கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது. சந்தையில் கடை அமைக்க டெண்டர் விடப்பட்டது. கடை அமைக்க அதிக பணம் கேட்பதாகவும், முறையாக கடைகள் வழங்கவில்லை என்றும் புகார் எழுந்தது. நேற்று, சி.பி.ஐ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கத்தினர் கூறுகையில், புதிய கடையில் விவசாயிகளுக்கு 50 கடைகளும், 50 தரைக் கடைகளும் தருவதாக கூறினர். இது சம்பந்தமாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி விவசாயி, வியாபாரி என பிரித்து கொடுப்பதாக தெரிவித்து விட்டு பொது ஏலம் அறிவித்தனர். புதுவயல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ