உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மானாமதுரை; மானாமதுரை அருகே உருளி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழாவிற்காக கடந்த வாரம் காப்பு கட்டி விரதமிருந்த மக்கள் நேற்று மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மானாமதுரையில் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மண்பாண்ட பொருட்கள் செய்யும் தொழிற்கூடத்திற்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு வந்தனர். அங்கு மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் செய்யப்பட்டிருந்த புரவிகள், மாடுகள், சுவாமி சிலைகள், குழந்தை உருவங்களுக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து கிராம மக்கள் ஊர்வலமாக உருளியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை