மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
திருக்கோஷ்டியூர், : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. இன்று பகல் மற்றும் இரவில் மாசித் தெப்பம் நடைபெறும்.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் தெப்ப உத்ஸவம் பிப்.15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை,வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடந்தது. 6ம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 7ம் திருநாளில் பெருமாளுக்கு சூர்ணாபிேஷகமும் நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குள மண்டபம் எழுந்தருளினார். காலை 10:10 மணிக்கு பட்டாச்சாரியர்களால் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். காலை முதல் பெண்கள் குளக்கரையை சுற்றி விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவில் தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் சுவாமி திருவீதி வலம் வந்தார்.இன்று பத்தாம் திருநாளை முவ்னிட்டு காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். நாளை காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும் நடைபெறும்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago