வேலியில் சிக்கிய மலைப்பாம்பு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த கோழியை முழுங்கியது. பின்னர் வயல் வழியாக சென்றபோது அங்கு போடப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் வந்து கம்பிகளை வெட்டி மலைப்பாம்பை உயிருடன் மீட்டு பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.