உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் ராகிங் புகார்: விசாரணை தீவிரம்

சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் ராகிங் புகார்: விசாரணை தீவிரம்

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புகார் செய்ததால் நிர்வாகம் விசாரித்து வருகிறது.இக்கல்லுாரி விடுதியில் தங்கி முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் படிகளில் ஏறும்போது பிரச்னை செய்வதாகவும், அடிக்கடி சட்டையை கழற்ற சொல்லி வற்புறுத்துவதாகவும்,மாணவிகளை இரவு 8:00 மணி வரை விளையாட்டு மைதானத்தில் விளையாட சொல்லி வற்புறுத்துவதாகவும் டிச.11ல் பல்கலை மானியக் குழு ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகாரை இமெயிலில் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் ராகிங் தடுப்புப் பிரிவு அறிக்கை கேட்டு மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் மாணவர்களிடம் விசாரித்தனர்.துணை முதல்வர் கூறுகையில்'' மாணவர்கள் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். கல்லுாரி முதல்வர் விடுமுறையில் உள்ளார். திங்கள் கிழமை(நாளை) அவர் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் ''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை