உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் மழையால் நிறைந்த சுரங்கப்பாதை: நீரில் மூழ்கி பலி 1

காரைக்குடியில் மழையால் நிறைந்த சுரங்கப்பாதை: நீரில் மூழ்கி பலி 1

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் நிரம்பிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலியானார்.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே குடியிருப்பிற்கு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி நகர், பொன் நகர், இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் இப்பாதையை பயன்படுத்துவர். குறைந்த அளவு மழை பெய்தாலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடும்.நேற்று முன்தினம் 15 செ.மீ., வரை மழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை நீரில் மூழ்கியது. நேற்று காலை சுரங்கப்பாதையில் இருந்த தண்ணீரை வெளியேற்ற ஆப்பரேட்டர் மோட்டரை இயக்கினார். அப்போது நீரில் ஒருவரது உடல் மிதந்தது. ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். விசாரணையில், இறந்தது ரயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் பீட்டர் 55, என தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி