தேவகோட்டையில் மழை
தேவகோட்டை, : தேவகோட்டை, புளியால் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் நேற்று அதிகாலை நான்கு மணி வரை இடியுடன் கனமழை கொட்டியது. காற்றுடன் மழை பெய்த காரணத்தால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.