உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்

மானாமதுரையில் குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்

மானாமதுரை : மானாமதுரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால் காட்டு உடைகுளம் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு காட்டு உடைகுளம் பகுதியில் தென்றல் நகர், கணபதி நகர்,யு.கே.நகர்,சூர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இக்குடியிருப்புகளை ஒட்டி காட்டு உடைகுளம், நாடாம்பியேந்தல் கண்மாய் உள்ள நிலையில் மழை காலத்தின் போது இக்கண்மாய் நிரம்பும் நிலையில் இருந்தன. கடந்த சில நாட்களாக மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் மேற்கண்ட கண்மாய்களில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.கவுன்சிலர் தேன்மொழி விஜயகுமார் கூறியதாவது: எனது வார்டுக்குட்பட்ட பகுதி கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அவசர காலங்களில் கூட 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வர மறுப்பதால் ஒரு சில நேரங்களில் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது.முறையாக நகராட்சி நிர்வாகத்திடம் வீடு கட்டுவதற்கான அனுமதி வாங்கி வீடுகளை கட்டியுள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்களை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காத காரணத்தினால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் தேங்கும் தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை