மேலும் செய்திகள்
பிரமோற்ஸவ கொடியேற்றம்
28-Mar-2025
சிவகங்கை : காரைக்குடி கல்லுாரி ரோட்டில் உள்ள ராமநவமி மகோத்ஸவ சபாவில்,ஏப்.,5 அன்று காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடைபெறும். ஏப்.,6ல் காலை 6:00 மணிக்கு ராமநவமி, காலை 6:30 மணிக்கு ஸ்ரீராமர் பட ஊர்வலம், கண்டனுார் வேதமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6:30 மணிக்கு ராமமார்க்கம் நாட்டிய நாடகம்நடைபெறும். ஏப்., 7 முதல் 16ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஸ்ரீமத் ராமாயணம்உபன்யாசம் நடைபெறும்.உயன்யாசத்தை ஆங்கரை ரங்கசுவாமி தீக்சிதர் நிகழ்த்துகிறார். தினமும் மாலை 6:00 மணிக்கு ராம ஜனனம், சீதா கல்யாணம், பித்ரு வாக்ய பரிபாலனம், சித்ர கூடா கமனம், பாதுகா பட்டாபிேஷகம், ஜடாயு மோக்சம், சுக்ரீவ பட்டாபிேஷகம், சுந்தரகாண்டம், விபீஷன் சரணாகதி, ராமர் பட்டாபிேஷகம் ஆகிய நிகழ்வு நடைபெறும். ஏப்.,17ல் இன்னிசை கச்சேரி, அஷ்டபதி பஜனை நடைபெறும். ஏப்.,20 அன்று காலை 8:30 மணிக்கு உச்சவ்ருத்தி, காலை 9:00 மணிக்கு சீதா கல்யாணம், ஆஞ்சநேய உற்ஸவம் நடைபெறும்.விழா ஏற்பாட்டை மகோத்ஸவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
28-Mar-2025