தே பிரித்தோ பள்ளியில் வாசிப்பு பூங்கா
தேவகோட்டை: தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை வாசிப்பு திருவிழாவாக கொண்டாடினர். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்ற வாசிப்பு பூங்காவை பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் தலைமையாசிரியர் சேவியர்ராஜ் வாழ்த்தி பேசினார். மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்த தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் வழங்கப்பட்டன. மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து பட்டத்தை வாசித்தனர். தினமலர் பட்டத்தில் மாணவர்கள் வாசித்ததில் வினாடி வினா நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி தலைமையாசிரியர் விக்டர்டிசோசா பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், அலுவலர்கள் பாடல், நடனம், வில்லுப்பாட்டு நாடகம் நடத்தி மாணவர்களை உற்சாகப் படுத்தினர். பள்ளி நிர்வாகத்தினர், வாசிப்பு இயக்கத்தின் நிர்வாக பொறுப்பாசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த இந்த நிகழ்வு போன்ற புதிய ஏற்பாடு செய்து தரப்படும் என தலைமையாசிரியர் சேவியர்ராஜ் மாணவர்களிடம் தெரிவித்தார்.