அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் அகற்றம்
இளையான்குடி: தினமலர் செய்தி எதிரொலியாக இளையான்குடி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர். இளையான்குடி அரசு மருத்துவமனையை 200க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் மருத்துவமனை வளாக கட்டடப் பகுதிகளில் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து காணப்படுவதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதினால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவது குறித்தும், ஜெனரேட்டர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி உள்ளது குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் வளாகப் பகுதியில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர்.மேலும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.