மேலும் செய்திகள்
திருத்தணி நகராட்சியில் புதிய கடைகள் ஏலம்
17-Sep-2025
காரைக்குடி : காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட கடைகளுக்கு நடந்த ஏலத்தில்,ஒரு கடை ரூ.2. 41 லட்சத்திற்கும், மற்றொரு கடை ரூ.1.70 லட்சத்திற்கும் ஏலம் போனது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடியில் 1987ம் ஆண்டு ராஜாஜி பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. சேதமடைந்த பழைய கட்டடம் அகற்றப்பட்டு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 27 புதிய கடைகள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, கழிப்பறை உட்பட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் டெண்டர் விடப் பட்டு, புதிய கடைகளுக்கான டெண்டர், நேற்று முன்தினம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. பஸ் ஸ்டாண்டின் இருபுறமும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் முதலில் உள்ள இரு கடைகள் பெரியதாக இருப்பதால் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் ரூ.10 லட்சம் முன் வைப்பு தொகை மூன்று ஆண்டு குத்தகையாக அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் ஏ1 கடை அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு வரிசையில் உள்ள முதல் கடை பி 1 கடை ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து ஒன்றுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில்: மொத்தமுள்ள 27 கடைகளில் 7 கடைகளுக்கு ஏலம் முடிந்துள்ளது. 6 கடைகள் சிங்கிள் டெண்டர் வந்துள்ளது. மற்ற கடைகள் ஏலம் போகவில்லை. ஏ1 கடையை ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்திற்கு வாடகை கேட்டுள்ளனர். 12 மாத டெபாசிட் தொகை ரூ. 28 லட்சத்து 92 ஆயிரம் 3 மாதத்திற்குள் கட்ட வேண்டும். பி1 ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றுக்கு ஏலம் போனது. இதற்கும் டெபாசிட் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17-Sep-2025