மேலும் செய்திகள்
காலிப்பணியிடங்களால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்
16-Jan-2025
திருப்புத்தூர்: ஊராட்சிகளில் செலவினங்களுக்கு விரைவாக நிதி அனுமதி அளிக்க ஊராட்சி செயலர்கள் கோரியுள்ளனர்.ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொறுப்பிலிருந்து அலுவலர்கள் பொறுப்பிற்கு தற்போது மாறியுள்ளது. இதனால் நிதி அனுமதிக்கான பொறுப்பும் தனி அலுவலர்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பொங்கல் விழா வந்துள்ளது. விழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீருக்கான மோட்டார் பராமரிப்பு, தெருக்கள், பொங்கல் வைக்கும் பொது இடங்களில் சுகாதார செலவினங்கள் ஊராட்சிகளில் செய்யப்பட்டுள்ளது.நிர்வாகம் மாறிய பின்னர் அலுவலர்களால் மின் கட்டணம் மட்டுமே முதல் நிதி அனுமதி பட்டுவாடாவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற செலவினங்களுக்கு இன்னமும் அனுமதியாகவில்லை.தற்போது தொடர் விடுமுறையால் செலவினங்களுக்கு அனுமதி மேலும் தாமதமாகி விட்டது. இதனால் ஊராட்சி செயலர்கள் தொடர் பராமரிப்பிற்கான செலவினங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க கோரியுள்ளனர்.
16-Jan-2025