உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமத்திற்குள் வரும் ஆற்றுநீர் தடுப்புச் சுவர் கட்ட கோரிக்கை

கிராமத்திற்குள் வரும் ஆற்றுநீர் தடுப்புச் சுவர் கட்ட கோரிக்கை

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே பையூரில் விருசுழியாறு நீர் உள்ளே வருவதைத் தடுக்க கிராமத்தினர் தடுப்புச்சுவர் கட்ட கோரியுள்ளனர். திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமம் பையூர். விருசுழியாற்றுக் கரையில் இக்கிராமத்தில் 200 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். மழை காலத்தில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்கையில் வெள்ள நீர் கிராமத்திற்குள் வந்து விடுகிறது. இதனால் குடியிருப்புகளில் நீர் பாய்ந்து கிராமத்தினர், கால்நடைகள் பாதிக்கின்றனர். மேலும் வயல்களில் பாயும் போது பயிரும் பாதிக்கிறது. இதைத் தவிர்க்க கிராமத்தினர் ஆற்றில் தடுப்புச் சுவர் கட்ட கோரியுள்ளனர். பையூர் நா.சந்திர சேகரன் கூறுகையில், 'பல ஆண்டுகளாக கிராமத்திற்குள் நீர் வந்து விடுகிறது. அதைத் தடுக்க கண்டவராயன்பட்டி அணைக்கட்டிலிருந்து - நல்லிப்பட்டி வரை ஆற்றங்கரையோரம் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். மேலும் பையூர் கண்மாய் நீரும் ஊருக்குள் வந்து விடுகிறது. கண்மாய உள்புறம் கட்ட பட்டுள்ள சிறிய தடுப்புச் சுவர் நீட்டித்து முழுமையாக கட்ட வேண்டியது அவசியமாகும்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை