உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவிரி --- குண்டாறு இணைப்பு திட்டம் திருப்புத்துாரை இணைக்க கோரிக்கை

காவிரி --- குண்டாறு இணைப்பு திட்டம் திருப்புத்துாரை இணைக்க கோரிக்கை

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள காவிரி - வைகை- - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தில் வறட்சியான திருப்புத்துார் பகுதியையும் சேர்க்க விவசாயிகள் கோரியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து திருப்புத்துார் பகுதியில் சர்வே நடந்தது. 75 மீ அகல இணைப்புக் கால்வாய் அமைக்க,150 மீ அகலத்திலான நிலம் சர்வே செய்யப்பட்டது.தேர்வான இடத்திற்கான எல்லைக்கற்களும் நடப்பட்டன. கல்லல் ஒன்றியம் மானகிரி பகுதி வழியாக இணைப்புக் கால்வாய் செல்லும் வகையில் நிலம் சர்வே செய்யப்பட்டுள்ளது. திருப்புத்துார் ஒன்றியத்திலிருந்து 15 கி.மீ.,துாரத்தில் இப்பகுதி உள்ளது. இதனால் திருப்புத்துார் விவசாயிகள் காவிரி- -வைகை- - குண்டாறு இணைப்பு பிரதான கால்வாயில் மானகிரியிலிருந்து பிரிவு கால்வாய் அமைத்து திருப்புத்துார் பகுதிக்கு பாசன வசதி ஏற்படுத்த கோரியுள்ளனர். திட்டப்பணிகள் நடைபெறாததால், பிரதான கால்வாய்க்கு சர்வே செய்யப்பட்ட இடத்தில் நில ஆர்ஜிதம் செய்யப்படாததால் தற்போது புதிதாக பல கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டன. இதனால் மறு சர்வே செய்ய வேண்டிய நிலையில் பொ.ப.துறையினர் உள்ளனர். அப்போது ஆய்வு செய்து பாசன வசதி மிகவும் குறைவாக உள்ள திருப்புத்துார் பகுதியை சேர்க்கும் வகையில் திட்டத்தில் திருத்தம் செய்து திட்டத்தை நிறைவேற்ற இப்பகுதி விவசாயிகள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை