மேலும் செய்திகள்
விட்டாச்சு லீவு
27-Mar-2025
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் ஏராளமான பறவைகள் வலம் வரும் நிலையில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பிரமனுார், பழையனுார், ராங்கியம், வெள்ளூர் கிராமங்களில் கண்மாய்கள் உள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது இக்கண்மாய்களுக்கு நீர்வரத்து இருக்கும். ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கண்மாய்களுக்கு பாசனத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது.இக்கண்மாய்களில் வெள்ளை கொக்கு, குருவி, நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக உள்ளன. சமீப காலமாக கருப்பு வாத்து, கருப்பு காகம் என அழைக்கப்படும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.கூட்டம் கூட்டமாக வலம் வரும் இப்பறவைகள் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்ணுகின்றன. வெள்ளுர் கண்மாயில் (மீன் பிடிக்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளதால்) இருந்து கடந்த சில தினங்களாக தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள வயல்களில் தேங்கி வருகிறது. திருப்பாச்சேத்தியில் இருந்த கருப்பு வாத்து என்ற இந்த பறவைகள் ஆயிரக்கணக்கில் தற்போது வெள்ளுர் கண்மாய்க்கு இடம் பெயர்ந்துள்ளன. வயல் வெளி முழுவதும் கருப்பு நிறத்தில் அடர்ந்து இந்த பறவைகள் இரை தேடி வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் புழு பூச்சிகளை வேட்டையாட வரும் இந்த பறவைகளுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே பறவைகள் வேறு இடம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க வனத்துறை பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும், கண்மாய்களில் பறவைகளுக்கு தேவையான உணவு கிடைக்க மீன்வளர்ப்பு உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
27-Mar-2025