உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி -- காரைக்குடிக்கு  சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை 

சிங்கம்புணரி -- காரைக்குடிக்கு  சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை 

சிவகங்கை: சிங்கம்புணரியில் இருந்து திருப்புத்துார் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. சிங்கம்புணரி, எஸ்.எஸ்., கோட்டை மாணவர்கள் தினமும் காரைக்குடிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்காக காலை 6:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், திரும்பி வர மதியம் 2:30 முதல் மாலை 6:30 மணி வரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், தினமும் நெரிசலில் மாணவ, மாணவிகள் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சிங்கம்புணரி, எஸ்.எஸ்., கோட்டை பகுதியில் இருந்து திருப்புத்துார் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருளானந்து மனு கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ