வடிகால் பணியை துவக்க கோரிக்கை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் தென்மாப்பட்டு அய்யனார் கோயில் ரோட்டில் வடிகால் வேலையை விரைவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர். திருப்புத்துார் 17வது வார்டு தென்மாப்பட்டு இடையர் தெருவிலிருந்து அய்யனார் கோயில் ரோடு வரை மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. அதில் ரூ. 10.2 லட்சம் மதிப்பிலான ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ரூ 6.5 லட்சம் மதிப்பிலான வடிகால் பகுதி வேலைக்கான உத்தரவு வழங்கி பலமாதங்களாகியும் பணி துவக்கப்ப டவில்லை. இதனால் அப்பகுதி கழிவுநீர் அய்யனார் கோயில் சேங்காய் ஊரணியில் தேங்குகிறது. அப்பகுதியினர் விரைவாக வடிகால் பணிகளை முடிக்க கோரியுள்ள னர்.