மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட நிர்வாகிகள் வளனரசு, ஆனந்தபூபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வட்டக்கிளை தலைவர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.மாநில செயலாளர் தமிழரசன் கூறியதாவது, பேரிடர் மேலாண்மை துறையில் கலைக்கப்பட்ட 97 பணியிடத்தை வழங்க வேண்டும்.இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் பணி முதுநிலை நிர்ணயம் செய்ய தெளிவுரை வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்., 13ல் உண்ணாவிரதம், பிப்., 22 மற்றும் 23 காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.தமிழகம் முழுவதும் வருவாய்துறை பணி பாதிப்பை சந்தித்தன. கடந்த 3 ஆண்டாக கோரிக்கை வைக்கிறோம். அதை அரசு நிறைவேற்ற முன்வராததால் தான் போராடுகிறோம். எங்கள் கோரிக்கை மீது அரசாணை வெளியிடாத பட்சத்தில் பிப்., 27 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்வோம். இதனால் வரும் எம்.பி., தேர்தல் பணி முற்றிலும் பாதிக்கும், என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago