வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரிசியை யானை தின்னுர்ய்ச்சு. சக்கரையை எறும்பு தின்னிருச்சு. போங்க போங்க. சின்ராசு ரொம்ப நல்லவன்.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானைகள்
10-Dec-2025
சிவகங்கை: ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில், புதுக்கோட்டை ரோட்டில் உள்ள பாம்கோ எண் 3 என்ற ரேஷன் கடையில், கூட்டுறவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கடையின் விற்பனையாளராக பாலசுப்பிரமணியன் பணிபுரிகிறார். அதிகாரிகள் ஆய்வின்போது, ரேஷன் கடையின் இருப்பு புத்தகத்தில் உள்ள விபரங்களின்படி சரக்கு இருப்பு இல்லை. மேலும், 50 கிலோ எடையில், 190 மூட்டை அரிசி, 11 மூட்டை சர்க்கரை, 11 பெட்டி பாமாயில், 7 மூட்டை கோதுமை மாயமாகியிருந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியிலேயே ரேஷன் கடையில் இருந்து அரிசி, சர்க்கரை, பாமாயில் கடத்தல் நடந்துள்ளதா என, கூட்டுறவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக இயக்குநர் பாலு கூறுகையில், “அந்த கடை விற்பனையாளர், இருப்பு விபரத்தை நோட்டில் எழுதுவதை மறந்து விட்டதாக தெரிவிக்கிறார். விசாரணை குழு அறிக்கையின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
அரிசியை யானை தின்னுர்ய்ச்சு. சக்கரையை எறும்பு தின்னிருச்சு. போங்க போங்க. சின்ராசு ரொம்ப நல்லவன்.
10-Dec-2025