உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எல்லை தெய்வத்திற்கு மண்சட்டிகளில் கறிச்சோறு

எல்லை தெய்வத்திற்கு மண்சட்டிகளில் கறிச்சோறு

மானாமதுரை : மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரை எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.நேற்று இரவு புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு ,நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுக்கறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி கிராம மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் குறத்தி அம்மன் கோயிலிலிருந்து கிளம்பி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ