உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சில மாதங்களில் சிதைந்த சாலை: தேங்கும் மழை நீரால் அவதி

 சில மாதங்களில் சிதைந்த சாலை: தேங்கும் மழை நீரால் அவதி

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள பலவான்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை, பல இடங்களில் சேதமடைந்து குளம்போல் தண்ணீர் கிடக்கிறது. கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பலவான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுற்றுலாத்தலமான, குன்றக்குடி, ஆத்தங்குடி, கானாடுகாத்தான் செல்லும் முக்கிய சாலையான இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலை பணி முடிந்த நிலையில் சூரக்குடி முதல் குன்றக்குடி வரை காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. இதனால் புதிதாக போடப்பட்ட சாலை உடைக்கப்பட்டது. தார்ச்சாலை மண்சாலையாக காட்சியளித்தது. மண்சாலையால் வாகனங்கள் பதிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து எழுந்த புகாரில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த ஆகஸ்டில் நடந்தது. புதிய சாலை போடப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் பள்ளங்கள் உருவாகி தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ