உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை தரக்கட்டுப்பாடு ஆய்வக கட்டட பூமி பூஜை

சாலை தரக்கட்டுப்பாடு ஆய்வக கட்டட பூமி பூஜை

திருப்புத்துார்: திருப்புத்துாரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்திற்கான பூமி பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் 198.315 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், 360.272 கி.மீ.நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்பு ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு, விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன.இந்த சாலைப்பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய திருப்புத்தூர் நெடுஞ் சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் 1.66 கோடி மதிப்பில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை