உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை : சென்னையில் போராட்டம் நடத்திய சாலைப் பணியாளர்களை கைது செய்ததை கண்டித்து சிவகங்கையில் கோட்ட பொறியாளர் அலு வலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். செயலாளர் ராஜா கண்டன உரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, நிதி காப்பாளர் நடராஜன், சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ