‛பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று காலை டூவீலரில் சென்றவர் மீது 'பெப்பர் ஸ்பிரே' அடித்து ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.காரைக்குடி அருகே கண்ணங்குடி சவுந்திரபாண்டி மகன் அரவிந்த் 27. இவர் புதுவயலில் உள்ள அரிசி ஆலை பகுதியிலுள்ள நெல் வியாபாரியிடம் வேலை செய்கிறார். நேற்று காலை காரைக்குடியில் ஒருவரிடம் நெல் வியாபாரத்தில் பெற்ற ரூ.30 லட்சத்தை வாங்கி கொண்டு, டூவீலரில் புதுவயல் சென்றார்.காரைக்குடி ஜாகீர் உசேன் தெருவில் சென்ற போது எதிரே டூவீலரில் வந்த 4 பேர் அரவிந்த்தின் டூவீலரில் மோதியதுடன் அவரது கண்ணில் 'பெப்பர் ஸ்பிரே' அடித்து ரூ.30 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர். காரைக்குடி வடக்கு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.