மேலும் செய்திகள்
ஆன்லைனில் வேலை ரூ.1.70 லட்சம் மோசடி
07-Aug-2025
சிவகங்கை, :ஆன்லைனில் வேலை, வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்தவர் ஹபிப் ரகுமான், 44. இவரது மொபைல் போனுக்கு ஜூலை 1ல், 'வாட்ஸாப்'பில், பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தை கிளிக் செய்து உள்ளே சென்றதும், அவரது எண் டெலிகிராம் குருப்பில் இணைக்கப்பட்டது. அதில் பேசிய ஒருவர், ஆன்லைன் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என, நம்ப வைத்தார். அவர் பேசியதை நம்பிய ஹபிப் ரகுமான், அவர் கூறிய ஒன்பது வங்கி கணக்கில், 21 தவணைகளில், 7 லட்சத்து 17,000 ரூபாயை அனுப்பியுள்ளார். பின், அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றினார். ஹபிப்ரகுமான் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதே போல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே கண்டவராயன் பட்டியை சேர்ந்தவர் கவிதா, 48. இவருக்கு பைனான்சில் இருந்து கடன் வாங்கி தருவதாக அடையாளம் தெரியாத ஒருவர் பேசியுள்ளார். அவர் பேசியதை நம்பிய கவிதா, அவரிடம் கடன் பெறுவதற்கான விவரங்களை கேட்டுள்ளார். அந்த நபர், கடன் வாங்க செயலாக்க கட்டணம், ஜி.எஸ்.டி., உள்ளிட்டவைகளுக்கு பணம் செலுத்த கூறியுள்ளார். அவர் கூறிய வங்கி கணக்கில், 19 தவணைகளில், 5 லட்சத்து, 53,900 ரூபாயை கவிதா அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் ஏமாற்றியுள்ளார். கவிதா புகாரில், சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2025