உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரூ.24 லட்சம் நிவாரண பொருள் அனுப்பி வைப்பு

ரூ.24 லட்சம் நிவாரண பொருள் அனுப்பி வைப்பு

சிவகங்கை: தமிழகத்தில் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில் சிவகங்கை மாவட்டம் சார்பாக முதற்கட்டமாக ரூ.24 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அமைச்சர் பெரியகருப்பன் அனுப்பி வைத்தார்.அரிசி, சர்க்கரை, எண்ணெய், உப்பு, கோதுமை மாவு உள்ளிட்ட 19 வகையான நிவாரணப் பொருட்கள் தலா ரூ.1200 வீதம் முதற்கட்டமாக 2000 குடும்பங்களுக்குவிழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.நிகழ்ச்சியில் கலெக்டர்ஆஷா அஜித், திட்ட இயக்குநர் வானதி, உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் அனுராதா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ