காரைக்குடியில் பள்ளிவாசல்களில் ரூ.4.25 லட்சம் திருட்டு
காரைக்குடி:காரைக்குடியில் உள்ள இரு பள்ளிவாசல்களில் அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுதலைவாசலில் உள்ள பள்ளிவாசலில் பிப்.23ம் தேதி மதரசா பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. இதற்காக ரூ. 4.20 லட்சம் தயார் செய்யப்பட்டு பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை பள்ளிவாசலை திறந்தபோது பணம் வைத்திருந்த அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டு ரூ. 4.20 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் திருடு போயிருந்தது.போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த நபர், முன்னதாக ஆறுமுக நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலிலும் பீரோவை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடியது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.