உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

நகை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் வண்டியூரைச் சேர்ந்த ராஜா மகன் ஸ்ரீஹரி 22. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ரவிமுருகன் மகன் சங்கர் 35. இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை ஒத்தக்கடை பாரில் மது அருந்தும் போது பழக்கம் ஏற்பட்டது. சங்கர் வங்கியில் பணிபுரிவதாகவும் தற்போது நகைகள் ஏலம் வருவதாகவும், உங்களுக்கு நகை ஏதாவது தேவைப்பட்டால் கூறுங்கள் என ஸ்ரீஹரியிடம் கூறியுள்ளார். அதை ஸ்ரீஹரி நம்பியுள்ளார்.நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கியில் அடகு வைத்த நகைகள் ஏலம் விடுவதாகவும், ஏலத்தில் தங்களுக்கு நகை வாங்கித் தருவதாகவும் கூறி ஸ்ரீஹரியை, சங்கர் அழைத்துள்ளார். அதை நம்பிய ஸ்ரீஹரி நேற்று மதியம் 1:00 மணிக்கு தனது அம்மா முத்துமாரியுடன் 42, ரூ.5 லட்சத்துடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தார்.முத்துமாரியை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள கடையில் நிற்க சொல்லிவிட்டு ஸ்ரீஹரியை மட்டும் பணத்துடன் கலெக்டர் அலுவலகம் முதல் தளத்திற்கு அழைத்துசென்ற சங்கர் பணம் ரூ.5 லட்சத்தை பெற்றுகொண்டு அதிகாரியை பார்த்து விட்டு வருவதாக சென்றார். சென்றவர் நீண்ட நேரம் கடந்தும் வரவில்லை. சந்தேகமடைந்த ஸ்ரீஹரி இது குறித்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். சிவகங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிந்து பணத்தை பெற்று தப்பியவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை