பெண்ணிடம் ரூ.15.12 லட்சம் மோசடி
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் மாணிக்கவாசக நகர் அன்சாரி மனைவி பாத்திமாபேகம் 25. இவரது அலைபேசிக்கு ஜன.,3 ல் வாட்ஸ் ஆப் தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக லிங்க் அனுப்பினர். அந்த லிங்க்-கை தொட்டு உள்ளே சென்றார். அதில் ஒருவர் முதலீடு ஆலோசகர் போல் பேசியுள்ளார். அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பி பாத்திமாபேகம் 6 வங்கி கணக்குகளில், 6 முறையாக ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து 747 வரை முதலீடாக செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான லாப தொகை வழங்கவில்லை. சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து பண மோசடி குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.