மேலும் செய்திகள்
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
19-Sep-2024
சிவகங்கை: அமைச்சர் உதயநிதி ஆய்வுக்கு பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருப்புத்துார் பி.டி.ஓ., சோமதாசுக்கு மீண்டும் பணி வழங்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அமைச்சர் உதயநிதி செப்., 10 ல் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், திருப்புத்துார் பி.டி.ஓ., சோமதாஸ் தவறான தகவல் கொடுத்ததாக கூறி, அவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.அவருக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தியும், மதுரை செல்லம்பட்டி பி.டி.ஓ., கீதாவை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரமேஷ் தலைமை வகித்தார். சந்தான கோபாலன் விளக்க உரை ஆற்றினார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர்கள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், தனபால், கார்த்திக், குமரேசன், மாவட்ட இணை செயலாளர்கள் செந்தில், பெரியசாமி, பாண்டி, ராம்நாத் பாபு, மாநில செயற்குழு பயாஸ் அகமது பங்கேற்றனர்.மானாமதுரையில் செந்தில்குமார், தேவகோட்டையில் கண்ணன், எஸ்.புதுாரில் ராஜேஸ்வரன், சாக்கோட்டையில் சுந்தரம், திருப்புவனத்தில் கருப்புராஜா, சிங்கம்புணரியில் ேஷக் அப்துல்லா, கண்ணங்குடியில் முருகேசன், காளையார்கோவிலில் பாலசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19-Sep-2024