ஊரக வளர்ச்சித்துறையினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை : துாய்மை காவலர்களுக்கு மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி, ஊராட்சிகள் மூலம் வழங்க வேண்டும் உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் மாரிமுத்து, மகளிர் அணி இணை செயலாளர் மீனாட்சி, மாநில செயற்குழு நாகராஜ், பொதுக்குழு ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில நிர்வாகி ஜோதி பாசு சிறப்புரை ஆற்றினார். மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு மாதம் ரூ.15,000 காலமுறை சம்பளம், தேசிய வேலை உறுதி திட்டத்தில் 18 ஆண்டாக பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசாரணை வெளியிட்டும் நிரந்தரம் செய்ய அரசு முன்வராததை கண்டிப்பது உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.