உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமிய அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம் 

கிராமிய அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: துறை பயிற்சிக்கு செல்லும் கிராம தபால் ஊழியருக்கு பயணப்படி, உணவு கட்டணம் அளிக்க கோரி சிவகங்கையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை வகித்தார். செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரத்தினபாண்டியன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் பி.3 சங்க கோட்ட தலைவர் மதிவாணன், உதவி செயலாளர் நாகலிங்கம், பொருளாளர் திருக்குமரன், செயலாளர் மாதவன், பி.4 சங்க செயலாளர் நடராஜன் உட்பட கிராம தபால் ஊழியர்கள் பங்கேற்றனர். கிராம தபால் ஊழியர்களுக்கு இலக்கு வைத்து மனஉளைச்சல் கொடுக்க கூடாது. பணிநீக்கம் முடிந்து மீண்டும் சேர்ந்த தபால் ஊழியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். மழைக்காலத்தில் ஊழியர்களுக்கு மழை கோட், காலணி வழங்க வேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி