உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாய்மர படகு போட்டி

பாய்மர படகு போட்டி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு படகிற்கு ஆறு பேர் வீதம் பங்கேற்றனர். 7 நாட்டிகல் மைல் துாரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. வாண வேடிக்கையுடன் போட்டி துவங்கியது. வீரர்கள் காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு படகுகளை செலுத்தினர். முதலாவதாக நம்புதாளை அம்பலம் படகும், இரண்டாவதாக ஈஸ்வரா படகும், மூன்றாவதாக தொண்டி ராமா படகும் வெற்றி பெற்றன். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ