மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி விழா
24-Nov-2024
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா இன்று துவங்குகிறது.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவருக்கு ஆறுநாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெறும். சூரர்களை வதம் செய்த பைரவரை சாந்தப்படுத்த சம்பக சஷ்டி விழா நடத்தப்படுகிறது. கார்த்திகை அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியான இன்று விழா துவங்குகிறது. யோகபைரவர் சன்னதி யாகசாலையில் காலை 9:00 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்குகிறது. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடைபெற்று மூலவர் யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர் யாகம் துவங்கி பைரவருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். டிச.6 வரை ஆறு நாட்களிலும் தினசரி காலை, மாலை இரு நேரங்களில் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும்.
24-Nov-2024