உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் சந்தனக்கூடு திருவிழா

மானாமதுரையில் சந்தனக்கூடு திருவிழா

மானாமதுரை: மானாமதுரையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தர்காவில் இருந்து கிளம்பிய சந்தனக்கூடு வீதிவுலாவை சிலம்பம் சுற்றி ஏராளமானோர் வரவேற்றனர். மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள பாஞ்சுபீர் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சந்தன செம்பு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழாவிற்காக நேற்று முன்தினம் தர்காவிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது. அப்போது மானாமதுரை சிலம்ப மாணவர்கள் சந்தன கூடுக்கு முன் சிலம்பத்தை சுற்றி வந்தனர். இவ்விழாவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான ஹிந்துக்களும் பங்கேற்றனர். மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை