மேலும் செய்திகள்
சிவாலயங்களில் சங்காபிேஷக பூஜை
10-Dec-2024
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி, சாலைகிராமம் சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷக பூஜைகள் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில்சுவாமிக்கு நவதிரவிய அபிேஷகம் செய்தனர். திருமஞ்சனம் நடந்தது. சோமநாதர் சன்னதி முன் 108 சங்குகளை வைத்து ேஹாமம் நடத்தினர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரம் சமேத ஞானாம்பிகை அம்மன், சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் சோமவார சங்காபிேஷக பூஜைகள் நடந்தது.திருப்புத்தூர்: திருப்புத்துார் கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலில் சோமவார பூஜை நடந்தது. கோட்டை, சங்கிலி கருப்பர், ராக்காச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. குன்றக்குடி ஆதினமடத்தை சேர்ந்த திருத்தளிநாதர் கோயிலில் நெல்லில்சங்குகள் பரப்பி பால், சந்தனம், குங்கும அபிேஷகம் செய்தனர். யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவர் சன்னதியில் 108 சங்குகள் அமைத்து சங்காபிேஷகம் செய்தனர். என்.வைரவன்பட்டி சிதம்பர விநாயகர், வைரவமூர்த்தி கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். பிச்சை சிவாச்சாரியார் தீபாராதனை காண்பித்தார். ஜெயங்கொண்டான் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுயம்பிரகார ஈஸ்வரர் கோயிலில்கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புனித நீரைக்கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
10-Dec-2024