மரக்கன்று நடும் விழா
தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் உழவன் நண்பர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரிட்டோ வரவேற்றார். சிறப்பு எஸ்.ஐ. முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் துரைராஜ், உழவன் நண்பர்கள் குழு நிர்வாகிகள் லாரன்ஸ், கார்த்திக் கபிலன் கனீஸ், மற்றும் போலீசார் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.