பள்ளி ஆண்டு விழா..
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமையில் நடந்தது.தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கல்வியின் மேன்மை குறித்தும், செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் கல்வியிலும், கற்றலிலும் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்தும் அதற்கேற்ப எவ்வாறு மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், பெற்றோர்கள்குழந்தை வளர்ப்பில் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்ற இப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாட்டினை இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குழு செய்துஇருந்தனர்.