பள்ளி ஆண்டு விழா
தேவகோட்டை: தேவகோட்டை துாய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பாத்திமா மேரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் எலிசபெத் முன்னிலை வகித்தார். பெங்களூரூ புனித வளன் சபை தலைவி லில்லிதோக்கநாட்டு, முன்னாள் மாணவிகள் சாந்தி, கலாராணி மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், புரவலர் ராமகிருஷ்ணன், ஜமாஅத் தலைவர் மகபூப்பாட்சா, பெற்றோர் ஆசிரியர் சங்க செயலர் சபாரத்தினம் பங்கேற்றனர்.