உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் முழுவதும்988 ரவுடிகள் வீட்டில் சோதனை

சிவகங்கை மாவட்டம் முழுவதும்988 ரவுடிகள் வீட்டில் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 988 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கத்தி வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரால் 1075 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 988 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் பிரச்னைக்கு உரிய நபர்கள் என 325 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் 214 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து 7 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.114 கஞ்சா குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதில் 83 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்களில் தலைமறைவாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்குகளில் ஈடுபடும் 73 பேரின் வீடுகள் சோதனை செய்யப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் பிரச்னை செய்யக்கூடிய நபர்களின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளபக்கங்கள் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வாள் போன்ற ஆயுதங்களுடன் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வரும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக எஸ்.பி., அலுவலக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை