உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில் டிக்கெட் எடுக்க வந்த பயணிக்கு அபராதம் விதித்த பாதுகாப்பு படை

ரயில் டிக்கெட் எடுக்க வந்த பயணிக்கு அபராதம் விதித்த பாதுகாப்பு படை

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு தக்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளின் டூவீலர்களை பறிமுதல் செய்வதோடு, அலைபேசியையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே பயணி கூறியதாவது:மானாமதுரை ஸ்டேஷனுக்கு தக்கல் டிக்கெட் பதிவு செய்வதற்காக காலை 10:50 மணிக்கு சென்றேன். டூவீலரை ஸ்டேஷன் முன் நிறுத்தியிருந்தேன். 10 நிமிடம் கழித்து வந்த போது எனது டூவீலரை ரயில்வே பாதுகாப்பு படையினர் வண்டியை லாக் செய்து அபராதம் விதித்துள்ளதாக என்னிடம் கையெழுத்து பெற்றதோடு எனது அலைபேசியையும் பறித்தனர் என்றார்.ரயில்வே பாதுகாப்பு படை எஸ். ஐ., சம்பத் கூறியதாவது: நாங்கள் நேற்று ரோந்து சென்ற போது நோ பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த டூவீலர் அனைத்திற்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ