கல்லுாரியில் கருத்தரங்கம்
சிவகங்கை: பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார்கள்பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியின் கணிதத்துறை சார்பாக சர்வதேச அளவிலான மாணவர்கள் கருத்தரங்கம் நடந்தது. கணிதப் பேராசிரியர் சுபா வரவேற்றார். செயலாளர் சிவராம் தலைமை வகித்தார். முதல்வர் விசுமதி வாழ்த்தி பேசினார். அமெரிக்க நார்த் சென்ட்ரல் கல்லுாரி கணிதத்துறை பேராசிரியர் தேவதாஸ் பாண்டியன் முதல் அமர்விலும் இரண்டாம் அமர்வில் சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் அந்தோணி டேவிட் பேசினர். பேராசிரியர் எலிசபெத் நன்றி கூறினார். தொடர்ந்து கணித மேதை ராமானுஜர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.