உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விக்சித் க்ரிஷி சங்கல்ப அபியான் கருத்தரங்கு

விக்சித் க்ரிஷி சங்கல்ப அபியான் கருத்தரங்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மகசூலை அதிகரிக்க, விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர், விவசாயிகளை இணைக்கும் கூட்டங்கள் மே 29 முதல் ஜூன் 12 வரை நடைபெறும் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் தெரிவித்தார். மத்திய அரசு, 'வேளாண் மகசூலை அதிகரிக்க செய்ய விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர், விவசாயிகளை இணைக்கும் விதமாக மே 29 முதல் ஜூன் 12ம் தேதி வரை மத்திய அரசு 'விக்சித் க்ரிஷி சங்கல்ப அபியான்' என்ற வயல்வெளி கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. காரீப் பருவத்திற்கான ஆயத்த வேளாண் திட்டமிடலை எளிதாக்குவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள் இணைந்து மாவட்ட அளவில் 45 கிராமங்களில் பயிர் மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை, மதிப்பு கூட்டிய பொருட்கள், கால்நடை மேம்பாடு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை