மேலும் செய்திகள்
மருத்துவமனை அருகே குப்பை எரிப்பு
21-Oct-2025
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கால்வாயில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் இரவு நேரத்தில் கொசுத்தொல்லையால் அவதிப்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவம் செயல்பட்டு வருகிறது. புற நோயாளிகளாக தினமும் 800 க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உள்நோயாளிகளாக 600 பேர் சிகிச்சையில் உள்ளனர். 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 100 பயிற்சி மாணவர்கள், 600 நர்சுகள், 400க்கும் மேற்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள கால்வாயின் மேல் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கால்வாயிகளில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மருத்துவமனையில் இரவு நேரத்தில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். தாய் சேய் நல வார்டில் மகப்பேறு பிரிவில் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் இரவு நேரத்தில் வார்டின் முகப்பு பகுதியில் திறந்த வெளியில் தான் காத்திருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் சிறிது நேரம் கூட நிற்கமுடியாத அளவிற்கு கொசுத்தொல்லை உள்ளது. அதேபோல் ஒரு சில வார்டுகளில் மின் விசிறிகள் இயங்கவில்லை. இதனால் சிகிச்சை பெரும் நோயாளிகள் தங்களுக்கு கொசுவால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என அச்சப்படு கின்றனர்.
21-Oct-2025