உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறுவட்ட விளையாட்டு போட்டி

குறுவட்ட விளையாட்டு போட்டி

தேவகோட்டை: தேவகோட்டை குறுவட்ட விளையாட்டு போட்டி கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடந்தது. தேவகோட்டை என். எஸ். எம். வி. பி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாடினர். தடகள போட்டியில் 14 வயது பிரிவில் சக்தி சாய்ராம் 15 புள்ளி, 19 வயது பிரிவில் வசந்தகுமார் 15 புள்ளி பெற்று வீர முதல்வன் பட்டம் பெற்றனர். ஆண்கள் பிரிவில் 184 புள்ளிகளை பெற்று விளையாட்டில் சிறந்த பள்ளிக்கான கேடயத்தையும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற் கல்வி இயக்குநர் பூமிநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் சேவுகராஜா சந்திரன் ஆகியோரை நிர்வாகத்தினர், தலைமையாசிரியர் வெங்கடாசலம் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை