உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்

குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்

காரைக்குடி,: காரைக்குடி கழனிவாசல் சூரக்குடி நெடுஞ்சாலையின் நடுவே உள்ள குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்கள் வரிசையாக காத்து நிற்கும் அவலம் நிலவுகிறது.காரைக்குடி கழனி வாசல் மூன்று சாலை சந்திப்பு முக்கிய சந்திப்பாக உள்ளது. காரைக்குடி கழனிவாசல் மற்றும் திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்தது. கழனிவாசல் அருகே சூரக்குடி செல்லும் சாலையில் குறுகிய பாலம் காணப்படுகிறது.நெடுஞ்சாலையின் இரு புறமும் அகலப்படுத்தப்பட்ட நிலையில் நடுவில் உள்ள குறுகிய பாலத்தில் வாகன ஒட்டிகளும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை