உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுநீரக நோய்க்கான மாத்திரை தட்டுப்பாடு

சிறுநீரக நோய்க்கான மாத்திரை தட்டுப்பாடு

சிவகங்கை::தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தமிழக மருந்து கழகம் வழங்குகிறது. தட்டுப்பாடு உள்ள சில மருந்து மாத்திரைகளை நிர்வாகம் உள்ளூரில் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்குகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சோடியம் பை கார்பனேட் மாத்திரைக்கு தட்டுபாடு நிலவுகிறது. இந்த மாத்திரை வளர்சிதை மாற்ற அமிலத்தன்மையை சரிசெய்யவும், வயிற்றில் உள்ள அமிலத்தை குறைக்கவும், வயிறு பிரச்னைகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், சோடியம் பை கார்பனேட் மாத்திரை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் மாத்திரை விநியோகம் செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி